HosurOnline

கணவரால் கைவிடப்பட்ட ஓசூர் பெண்ணை கருவுறச் செய்து குழந்தைக்கு தந்தையான தலைமை காவலர் பணி இடை நீக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வன்.  இவர் ஓசூரில் பணியாற்றியபோது, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் நெருக்கமாக பழகினாராம். 

இதன் மூலம் அவருக்கு 11 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.  இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருவதாக அந்தப் பெண் ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வினவினர்.  இதற்கிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனை பணியிடை நீக்கம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார்.