HosurOnline

அஞ்செட்டி அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி பரிதாப பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற முனியப்பா (65) என்ற விவசாயி, கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒன்னேபுரம் கிராமத்தைச் சேர்ந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. தகவலறிந்து வந்த அஞ்செட்டி வனத்துறையினரும் காவல்துறையினரும் முனியப்பாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.