HosurOnline

ஊத்தங்கரையில் மளிகைக் கடை பூட்டை உடைத்து ₹19,000 திருட்டு!

ஊத்தங்கரையில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து கல்லாப் பெட்டியிலிருந்து ₹19,000 பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை பரசுராமன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (42), பேரூராட்சி வணிக வளாகத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர், திங்கள்கிழமை காலை வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுக் கல்லாப்பெட்டியில் இருந்த ₹19,000 திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.